கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்: விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு..!

பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமானநிலையம் வந்த தமிழக முதல்வருக்கு பல ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு.

ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க கழக கொடிகளை கையில் ஏந்தியவாறு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பின்போது, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், முத்துச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமகிருஷ்ணன் Ex Mla, பத்மநாபன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி மற்றும் மாவட்ட, நகர, பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.