கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,வெள்ளலூர் பிரிவு, எல்அன்ட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் மோதிக் கொண்டன. இதில் ஈச்சர் வேன் ஓட்டி வந்த ஈரோடு சென்னிமலை ரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 35) அதே இடத்தில் பலியானார் . வேனில் இருந்த துரைசாமி (வயது) 27 கண்டெய்னர் லாரி கிளீனர் தீபக் (வயது 21) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சிங்காநல்லூர் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இது குறித்து ஈச்சர் வேன் டிரைவர் மனைவி கோமதி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் நிதிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.