கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மஞ்சுளா .இவர் நேற்று தெற்கு உக்கடம் ,அற்புதம் நகரில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பவர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அப்துல் காதர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.