கோவை : சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (வயது 25)இவர் சூலூரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து மகேந்திர சிங்கை கத்தியால் குத்தினார்கள் .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மகேந்திர சிங் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்.
Leave a Reply