உஷார்… ஆன்லைன் மோசடி: கோவை பெண் உட்பட 2 பேரிடம் ரு 13 லட்சம் அபேஸ்..!

கோவை சிங்காநல்லூர் , நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 34 ,இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து அதிக பணம் ஈட்டலாம். விருப்பம் இருந்தால் இந்த எண்ணை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் வங்கி மூலம் ரூ 6 லட்சத்து59 ஆயிரம் அனுப்பி வைத்தார். பிறகு அந்த நபர் அவரிடம் தொடர்பு கொள்ளவில்லை.அந்த பணத்தை மேற்படி நபர் மோசடி செய்துவிட்டார். இதேபோல கோவை இருகூர், பவர் அவுஸ் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் , இவரது மனைவி பேபி(வயது 57) இவரது செல்போன் வாட்ஸ் அப்புக்கு கடந்த மாதம் இதே போல ஒரு மெசேஜ் வந்தது .அதில் தொடர்பு கொண்டவர் இங்கிலாந்தில் இருந்து பேசுவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும் , இந்தியாவில் நிலம் வாங்க வேண்டும்.நாங்கள் ரூ 87 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அனுப்பி வைக்கிறோம்.நீங்கள் நல்ல இடத்தை பார்த்து வாங்குங்கள் என்று கூறினார். அந்த பணத்தை எடுப்பதற்கு கஸ்டம்ஸ்க்கு நீங்கள் ரூ6 லட்சம் வங்கியில் செலுத்த வேண்டும். அதை முதலில் அனுப்பி வையுங்கள் என்று கூறினார். இதை நம்பி ரூ. 6லட்சத்து 45 ஆயிரம் அனுப்பி வைத்தார். அந்த பணத்தை மேற்பட்ட நபர் மோசடி செய்து விட்டார்.இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .