தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, ...

கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ...

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் ...

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும் ...

கோவை பேரூர் தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 65). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது மொபட் காணவில்லை. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...

கோவை நவக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) தொழிலாளி. இவரது மனைவி ராதாமணி (37). இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது 2-வது மகள் சன்மதி (4) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் ராதாமணி சில நாட்களாக மனவேதனையுடன் ...

கோவை: சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழு கூட்டம், கோட்ட மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவையில் இருந்து ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தினர். அதில் அவா்கள் கூறியிருப்பது:- 2023 பிப்ரவரியில், கோவை ரயில் நிலையத்தின் 150-வது ஆண்டு தொடக்கத்தை, சிறப்பு விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும். ...

கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை ...

கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் காவலராக பணிபுரிந்தவர் வெங்கடாசலம் .இதேபோல கோவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் வெங்கடேஷ் .இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் கோவிலில் பணி புரிந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த ...

கோவை குனியமுத்தூரில் கடந்த 23ஆம் தேதி இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர் 2 பேரையும் ...