கோவை மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 30) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் இதில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply