கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பத் தேதியை நீட்டிக்க அமைச்சரிடம் மாணவர் கூட்டமைப்பும் வேண்டுகோள்..!

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் நேரில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கை இது நாள் வரை நடத்தி முடிக்காத சூழலில் ஆன்லைன் மூலமாக மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது.மேலும் அந்த விண்ணப்பத்தை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமானால் எந்த கல்லூரியில் மாணவர் படிக்கின்றனரோ அந்தப் பள்ளி கல்லூரியின் முதல்வர் அவர்களிடம் கையொப்பம் பெற்று அதனை சமர்ப்பித்தால் தான் ஆன்லைனில் விண்ணப்பம் ஏற்கப்படும் சூழல் உள்ளது மாணவர்களின் கல்லூரியே தெரியாமல் எப்படி விண்ணப்பிக்க முடியும் எனவே கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் துறை செயலரை அழைத்து உடனடியாக ஒன்றிய அரசிடம் பேசி காலம் அவகாசம் வாங்குவதாக உறுதி அளித்தார்.