நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற தகுதி வாய்ந்தவகள் விண்ணப்பிக்கலாம்-மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல்..!

கோவை: நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் 15 பயிற்சியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு எம்.ஆர்க் – 2, பி.ஆர்க் – 2, பி.இ, பி.டெக் ( சிவில்) 3, பி.இ, பி.டெக் ( ஐ.டி.) – 2, எம்.பி.ஏ, பிஜிடிஎம் இன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் – 3, பி.எஸ்.ஸி விஷ்யூவல் கம்யூனிகேஷன் -1, பி.காம் ( அக்கவுண்ட்ஸ்) – 1 என மொத்தம் 15 காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமக்களாக இருத்தல் வேண்டும். தங்களது பட்டப் படிப்பை கடந்த 18 மாதங்களுக்குள் நிறைவு செய்தவார்களாக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியின் அதிகபட்ச காலம் 6 மாதங்கள்.பயிற்சிக் காலத்தில் ஒரு பயிற்சியாளருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பா் 29 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.