கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஜமீன் கோட்டம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை உள்ளது .இங்கு 25 -ம் தேதி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது.தீ மள, மள வென பரவியது. இதில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கயிறு எரிந்து நாசமானது .இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் ...

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி, முகாம்பிகை நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 54 )இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி தினத்தில் காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க ...

கோவை உப்பிலிபாளையத்தில்உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் வீடு உள்ளது. இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் வீட்டைப் போட்டுவிட்டு வெளியூர் சென்று விட்டார்.வீட்டிலிருந்த உதவியாளர் ரூபி கனிமொழி என்பவர் வீட்டில் மின் விளக்கை எரியச் செய்து விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த விளக்கு ...

சிவகாசி: கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி களைகட்டியதால், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடந்துள்ளது. சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்துக்கு மேல் தயாராகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை ...

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது ...

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் ...

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி ...

சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது, சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் வங்கதேசத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. நேற்று முன்தினம் வங்கதேசத்தின் பாரிசால் பகுதியில் கரையைக்கடந்த இந்த சிட்ரங் புயல் வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில் பெறும் சேதத்தை ...

திருச்சி: திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரின் டயர் வெடித்ததில், கார் வேகமாக எதிர் திசையில் ...

கோவை: உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபினுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் ...