கோவை: திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனையால் அதிமுக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அதிமுக தரப்பு மறுத்தது.
இந்நிலையில் தான் தற்போது அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் சென்னை மற்றும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ள பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
Leave a Reply