சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் ஒன்றாகத் திரண்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் ...
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டங்கள் நாளை முதல் நடைபெற உள்ளன. தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தன்னிச்சையாகவும் சில பகுதிகளை விட்டுவிட்டும் வாசித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனைக் கண்டித்து ஆளுநர் ரவி முன்பாகவே ...
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரும், 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரான முன்னாள் அரசர் 2-ம் கான்ஸ்டென்டைன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 82. ஏதென்ஸ் நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கான்ஸ்டென்டைன் உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. கிரீஸ் வரலாற்றிலேயே 2-ம் கான்ஸ்டென்டைன் ஆட்சி செய்த 9 ஆண்டுகள்தான் மிகவும் கொந்தளிப்பான அமைதியற்ற ...
எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக்கு முடிவெடுக்காமல் இருக்கும் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வருகை புரிந்துள்ளனர். ...
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக கனடா நாட்டுக்குள் இவர்கள் 4 பேரும் நுழையத் ...
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா ...
சென்னை : தி.மு.க., அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்களை ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கைகள், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பெற்றன. தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். பழைய ...
பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுற்று பாதையில் இருந்து ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ...
கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டாடுவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை,தேனி மற்றும் தென் ...













