கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம். மடத்தூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நித்யா ( வயது 32 )இவர் நேற்று துடியலூரில் இருந்து தனியார் கவுன்சில் கோவை ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பஸ் ஸ்டாப்பில் பஸ்சைவிட்டு இறங்கும் போது இவர் வைத்திருந்த பையைக் காணவில்லை .அதில் 3 பவுன் தங்க செயின், ரூ.52 ஆயிரம் ...

கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 50 )இவர் கோவை ஆர் .எஸ். புரம். பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கார் பார்க்கிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று குடிபோதையில் படம் பார்க்க வந்த 2பேர் அசோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் ...

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31). சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி ...

கோவையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, உதவி இயக்குநர் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) குருபாரதி தலைமை வகித்தார் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவா்கள் மருத்துவரிடம் ...

கோவை: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவர் தினம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி ...

கோவை: ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழனின் கனவுகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசின் புகைப்படக் கண்காட்சி ஜனவரி 13 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசின் துறைகளை ...

கோவை கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஐஎஸ்ஐ தரமுத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தர நிர்ணய அமைவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோவை தர நிர்ணய அமைவனம் கூறியிருப்பதாவது: கோவையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவன இணை இயக்குநர்கள் எஸ்.நாகவல்லி, ஜீவானந்தம், உதவி இயக்குநர் கே.கவின் ஆகியோர் கோவையில் உள்ள இரு பொம்மை ...

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன. புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா். கடும் ...