புதுச்சேரியில் கிறிஸ்மஸ் கேக் தயாரிக்க பழங்கள் ஊற வைக்கும் பாரம்பரிய விழா..!

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் ஆதித்யாஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள் ஊற வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப் பட்டன. இந்த ஊறல் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பொழுது சேர்க்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் கேக் ஆனது சிறப்பாக வரும் பொழுது அந்த ஆண்டும் சிறப்பாக அமையும் என்பது ஒரு ஐதீகம் என்று கருதப்படுகிறது.இது ஒரு பாரம்பரியமான விழாவாகும். இந்த விழா கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவ , மாணவிகள் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர், ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.