ஊட்டி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், மாவட்டத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். குறிப்பாக ...

கோவை: தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆண்டுதோறும் தீபாவளி ...

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனோஜ் குமார் ( வயது 18 )இவர் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் தனது நண்பர் 2 பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டனர்.பின்னர் செல்போனை கேட்டனர். ...

கோவை போத்தனூர் ,சாரதா மில் ரோடு, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62 ) இவரது மனைவி சுசிலா (வயது 58) விக்ரமன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று இரவு சுசிலா வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.அப்போது குடி போதையில் வந்த விக்ரமன் கதவை ...

கோவை சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் .அவரது மகன் பிரதீப்( வயது 20) இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் .இதனால் மனம் உடைந்த பிரதீப் நேற்று அவரது வீட்டில் ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், புது தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பொன் துரை ( வயது 35) தனியார் நிறுவனத்தில் சி.என்.சி .மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் ...

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.அவரது வீட்டில் நடந்த சோதனையில் 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 5பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ,ஏ) உயர் அதிகாரிகள் இன்று கோவை வந்தனர்.இவர்கள் கோவையில் முகாமிட்டு ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...

கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியில் அருள்மிகு. ஸ்ரீ .ரகு பகவான்,ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது.இங்கு கோவில் பூசாரி 23ஆம் தேதி இரவில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 3 பித்தளை விளக்கு, 1தாமிர செம்பு, ...