கொங்குவில் தலைதூக்கும் ஸ்டாலின்… திமுகவிற்கு வரும் முக்கிய புள்ளி… எடப்பாடி அடுத்த ஷாக்.!!

சென்னை: கொங்கு திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிவரும் நிலையில், இன்னொரு சம்பவம் அதிமுகவின் கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது.

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி டீமுக்கு லேசான கலக்கத்தையும், சந்தேகத்தையும் தந்து வருகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் என்பதெல்லாம் போய், தமிழக பாஜகவுக்குள்ளும் சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ளன..

எப்போதுமே, மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க, பாஜக தீவிரம் காட்டுவது இயல்பான விஷயம்.. ஆனால், சமீபகாலமாக நடந்து வரும் பாஜக பூசல்களினால் நிலைமையே தலைகீழாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன், சசிகலா தலைமையில் ஒவ்வொரு அணியும் இயங்கி கொண்டிருக்கின்றன. பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரும் மனநிலையில் இருக்காத நிலையில், தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதில் பிரதானமாக, திமுகவே அறுவடை செய்ய பார்க்கிறது. அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டபோது, மேலும் சிலர் திமுக பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது..

அந்தவகையில், சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. பிறகு, கோவை செல்வராஜுக்கு திமுக மேலிடம் முக்கியமான ‘அசைன்மென்ட் ஒன்றை தந்ததாக சொல்லப்பட்டது. அதாவது, ஓபிஎஸ் டீமில் இவரை போலவே அதிருப்தியில் இருக்கும் மாவட்ட அளவிலான தலைவர்களை, திமுக பக்கம் கொண்டு வர சொல்லி கூறியுள்ளதாம். அதேபோல, எடப்பாடி பழனிசாமி டீம் பக்கம், அதிருப்தியாளர்கள் வேறு யாரும் அணி தாவுறதுக்கு முன்னாடியே, திமுகவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கும் தலைமை உத்தரவு ஒன்றினை போட்டதாகவும் தெரிகிறது..

இதைடுத்து, 3 மாவட்ட செயலாளர்கள், 3,000 தொண்டர்களுடன் அடுத்த 10 நாட்களில் திமுக பக்கம் வர போகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சூலூர் கந்தசாமி எழுதிய ஒரு கடிதம், எடப்பாடியின் கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது.. சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி, முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. அதுவும், அந்த கடிதத்தில் அண்ணன் என்று ஸ்டாலினை குறிப்பிட்டு எழுதியதுதான், அதிமுகவில் “இடிக்கிறது”.. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க உத்தேசிக்கப்பட்டு தமிழக அரசு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் சிலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்… அந்தவகையில், 2வது நாளான நேற்று சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமியும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.. அத்துடன், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அந்த கடிதத்தை அங்கிருந்த மக்களிடம் அவர் காட்டினார். அதில், “மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்களுக்கு” என்று ஆரம்பித்து அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார் கந்தசாமி.. அதிமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வரை அண்ணன் என்று அழைத்து கடிதம் எழுதி இருப்பதுதான், அனைவரின் கவனத்தையும் சூலூர் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகிறது..

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கந்தசாமி எம்எல்ஏ பேசும்போது, “சின்னங்கள்தான் வேறு எண்ணங்கள் ஒன்றுதான்” என்று கூறியிருந்தார்… சின்னம்? எண்ணம்? என்றெல்லாம் கந்தசாமி சொல்கிறாரே, ஒருவேளை கட்சி மாற போகிறாரோ? என்ற டவுட் கிளம்பியது.. இப்போது “முதல்வர் அண்ணன்” என்று லெட்டர் எழுதியுள்ள நிலையில், அந்த டவுட் இப்போது அதிகமாகி உள்ளது.. ஏற்கனவே கொங்கு திமுக, கடந்த ஒரு வருட காலமாகவே, தீயாய் வேலை பார்த்து வருகிறது. காரணம், கடந்த தேர்தலில், திமுக ஜஸ்ட் பாஸ் வெற்றியை பெற்றதற்கு காரணமே கொங்கு திமுகவின் சறுக்கல்கள்தான்..

எனவே, கொங்குவை பலப்படுத்துவதற்காகவே, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திமுக பக்கம் கொண்டுவரும் முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி இறக்கிவிடப்பட்டுள்ளார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார். இன்னும் பல பேர் திமுக பக்கம் தாவ ரெடியாகி வருவதாகவும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், கந்தசாமி கடிதம் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆனால், முதல்வருக்கு கந்தசாமி லெட்டர் எழுதியதுகூட பிரச்சனை இல்லை.அண்ணே என்ற ஒற்றை சொல்தான், எடப்பாடி தரப்பின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருக்கிறதாம். ஆட்டம் காணுதா அதிமுக கொங்கு?