உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு .
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர். வாரணாசி மட்டுமல்லாது வடஇந்தியாவின் பல்வேறு பகுதி மக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய மச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply