கோவை மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த
3 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி. ஜி ஓ காலனியை சேர்ந்த மகேந்திரன் ( வயது 22 ) சங்கரன்கோவில் சுப்பிரமணியன் ( வயது 23)கோவை குறிச்சி சிட்கோ அவுசிங் யூனிட்டை சேர்ந்த அண்ணாமலை (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்களில் மகேந்திரனும் சுப்பிரமணியமும் டிரைவர்கள். அண்ணாமலை ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். காம், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் ஆந்திராவில் இருந்து இந்த கஞ்சாவை வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply