தண்ணீர் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் வசூல்- ரயில்வே காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

ண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிடபட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் வைத்து மொத்தமாக 20 ரூபாய்க்கு விற்றுவந்துள்ளார்கள்.

இதனை, சிவம் பட் வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகாராக பகிர்ந்துள்ளார். இதன் அடிப்படையில், அம்பாலா ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது .

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த சந்திர மௌலி மிஸ்ரா என்ற சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அம்பாலா ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.