காந்தி நகர்: குஜராத்தில் இன்று நடக்கும் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இதற்காக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், ...

குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, அங்கு தொடர்ந்து 2வதுமுறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் சேர்ந்து 25 கேபினெட் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ...

காந்திநகர்: குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பூபேந்திர படேல் தலைமையில் மீண்டும் பாஜ அரசு அமைய உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், ஆம் ஆத்மி 5 ...

நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் இருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக ...

கொச்சி: மண்டல பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 7,695 பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். ...

முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி மேயர் பிரியா ராஜன் பயணம் செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் ...

சென்னை: குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அகமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜ வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து புதிய பாஜ எம்எல்ஏ.,க்கள் ...

ஜி 7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்திய ஆதரவு தெரிவிக்காது என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யா அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ரஷ்யாவின் எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் உச்சவரம்பு விலை விதிப்பதற்கு இந்தியா ஆதரவு கொடுக்க முடியாது என கூறியுள்ளது ரஷ்யத் துணைப் ...

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினியின் உருவம் பதித்த கேக்கை வெட்டி, உற்சாகமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை ...