சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் ...
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் ...
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை ...
புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி ...
சமூக வலைத்தங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைகாட்சிகளில் பிரபலங்கள் அழகு சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களின் மீது தரம், நம்பிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருள்களின் தரத்தை சோதிக்காமல் விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் ...
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றதிலிருந்து நடைபெற்ற 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக திமுகவுக்கு சென்று விட்டன. இதுவே அதிமுக தோல்வியடைய காரணம் என சி.வி சண்முகம் உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினார். அதே போன்று ...
ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ...
கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தடாகம் அதனை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு ...
கோவை ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சிவராம பாண்டியன் (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் எஸ் சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் .தினேஷ் ...
கோவை : தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சொந்த மாநிலம் செல்வதாகவும் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவியது.இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில் அவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது ...












