ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், ...

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கட்சி தலைமை ஆனது ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிக்கும் என கூறினார். பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் ...

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இன்று, ...

இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது அடிப்படையான ஒன்று. தேர்தலின் போது வாக்களிப்பதற்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தற்போது கோஸ்ட் இமேஜ் அனுப்பப்படும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த புதிய ...

ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் ...

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காஷ்மீர் ராஜ்பாக் பகுதியில் உள்ள பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டின் அலுவலகத்தை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியது. ஃபெடரல் ஏஜென்சியின் ஒரு குழு ஹுரியத் அலுவலகத்திற்கு வந்து கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் இணைப்பு அறிவிப்பை ஒட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். ராஜ்பாக்கில் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் ...

சர்வதேச ஹோல்டிங் நிறுவனமான IHC அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 3200 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டில் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீடு மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இந்த எஃப் ...

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் (Storm Today) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்தது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1ம் தேதி ...

டெல்லி: 2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிட்டது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது. இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். அதானி குழு பங்கு சரிவு, மோடி – பிபிசி ஆவணப்பட விவகாரம் காரணமாக இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் கூட்டத்தொடராக ...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள் என அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் மல்லூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் ...