குப்பை மேட்டில் அனாதையாக கிடந்த 2 மாத ஆண் குழந்தை மீட்பு..!

கோவை அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் காலணியில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை கிடந்தது. அந்த பகுதியில் சென்ற பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு பரிசோதனை செய்து பார்த்தனர். அந்தக் குழந்தைக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் நலமாக இருந்ததாகவும் மேலும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் சிகிச்சை அளித்து தொட்டில் குழந்தை திட்டத்தில் பராமரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்து குழந்தையை யாரேனும் போட்டு சென்று உள்ளனரா ? இது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாத கைக்குழந்தை சாலையில் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.