ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரில் புகார் மனு அளித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கள நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பங்கேற்றார். இதேபோல ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்னி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகார் குறித்து துணை ஆணையர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. எதிர்கட்சிகளின் புகார் மனு மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply