பிரதமர் மோடியின் முயற்சியால் ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது..?

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., ௨௫ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு முடிய உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.பெரும் பாதிப்புஇந்தப் போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.அதோடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், உணவுப் பொருள்கள் வினியோகத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், பேச்சு நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக, புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அவர் பல முறை பேசியுள்ளார்.உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஜி – ௨௦’ தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. வரும் செப்டம்பரில் இந்தாண்டுக்கான மாநாடு புதுடில்லியில் நடக்க உள்ளது.’உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்’ என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ‘தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி போரை நிறுத்தும்படி புடினிடம் வலியுறுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் தொடர்பாக விவாதிக்கும் கூட்டம், சமீபத்தில் ரஷ்யாவில் நடந்தது. இதில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். அப்போது புடினுடன் அவர் தனியாக பேச்சு நடத்தினார். இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அஜித் தோவல் கடந்த ௧௦ நாட்களாக பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்போது அந்த நாட்டு தலைவர்களிடம், பிரதமர்மோடியின் சிறப்பு செய்தியை அவர் பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.அதிரடி அறிவிப்புஇதற்கிடையே, ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக ஒரு அதிரடி அறிவிப்பை, பிரதமர் மோடி மார்ச் முதல் வாரத்தில் வெளியிடுவார் என்ற தகவல், புதுடில்லி அதிகார வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.இதற்காக முதல் வாரத்தில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் அல்லது புடின், இந்தியாவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.ஜி – ௨௦ தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே ஓராண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் வாயிலாக, சர்வதேச அரங்கில் மோடியின் செல்வாக்கு மேலும் உயர உள்ளது..