பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பஸ்சில் இருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வைத்து இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். ...

கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருபவா் அக்பா். இவா் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக தனது பைக்கில் வந்தார். பின்னர் தனது வாகனத்தை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது ...

கோவையில் காட்டு யானைகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள்: பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறையினர் எச்சரிக்கை கோவை நரசிபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உட்கொண்டும், சேதப்படுத்தியும் அதிகாலையில் காட்டுப் பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ...

கோவையில் தொடர் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருட்டு:  இரு வாலிபர்களை  கைது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவுகிறது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் ...

டெல்லி: தாஜ்மஹாலுக்கு சொத்து, தண்ணீர் வரி கட்டாததால் ஆக்ரா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ரூ. 1.5 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1.9 கோடி குடிநீர் வரியை செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 2021- 22 மற்றும் 2022-23 நிதியாண்டிக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. வரியை கட்ட கோரி இந்திய ...

மிதக்கும் நகரம்: உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலத்தில் வாழக்கூடிய இடம் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், எதிர்கால ஆப்ஷன்கள் குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளது. மனிதன் இப்போது மிதக்கும் நகரங்களில் வாழத் தயாராகிறான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழலாம். இந்த மிகப்பெரிய நகரம் ராட்சஸ கடல் மீன் அளவில் இருக்கும். ஒரு ...

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள “உழவன்” கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன்பெற வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறை ...

பா.ம.க எம்.எல்.ஏ அருள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தது பா.ம.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள் விளக்கம் அளித்துள்ளார். அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, கபடி போட்டியைத் தொடங்கி ...

புதுடெல்லி: இந்திய எல்லையை இனி யாராலும் மாற்ற முடியாது. இதுவரை இல்லாத அளவுக்கு எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். ...