கோவை ராமநாதபுரம், சுப்ரமணியன் வீதியைசேர்ந்தவர் எஸ். கே பிரியதர்ஷினி ( வயது 36) இவருக்கும் ஈரோடு தில்லை நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மோகனசுந்தரம் (வயது 38) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்கள் ஈரோட்டில் வசித்து வந்தனர். கணவர் மோகன் சுந்தரம் வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் பிரியதர்ஷினிக்கு திருமணத்தின் போது ...
கோவை: பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 60). வக்கீல். இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனது வீட்டில் மாடுலர் கிச்சன் அமைக்க முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை ...
கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் உள்ளது. ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை துணைத்தலைவர் ...
கோவை, ஜன.25- நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி ...
கோவை கணபதி மாநகர் எப்.சி.ஐ ரோடு அருகே 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்த அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ...
கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம் பிரிவு, ராசிபாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார்கோவில் எதிர்புறம் ஸ்வீட் பீடா கடை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அந்த ...
கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ,நேரு நகரை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகா ( வயது 28) மணிகண்டன் என்ற மணி( வயது 24) செம்மேடு ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள பாலத்துறை ,பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மகன் ஹரிதாஸ் ( வயது 32) )மினி ஆட்டோ ஒட்டி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த உயரமான முருங்கை மரத்தின் கிளையை நேற்று வெட்டினார் .அப்போது வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த ...
கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானராஜ், இவரது மகன் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் ( வயது 25 )எட்டிமடை நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் ...
கோவை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின் பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ...