ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ...

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 21 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், நெடுந்தீவு அருகே ...

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துளளார். மணிப்பூர் ...

கேரளத்தில் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய தொடா் சோதனைகளில் ரூ,1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன. கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து வருகின்றனா். மேலும், அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் மாற்றி தரப்படுவதாகவும், ஹவாலா முறையில் பணப் ...

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது. இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ...

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள ...

சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.. ...

சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.   ...