மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை : ஜூன் 24இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு..!

ணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துளளார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வந்ததை அடுத்து அமித்ஷாவின் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜூன் 23 ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவிருக்கும் நாளுக்கு முந்தைய தேதியில், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைதேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இன மோதல்கள் வன்முறையாக வெடித்ததில், 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. கடந்த மாதமும் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை கொண்டுவர பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

மீதே மற்றும் குகி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்தித்து, அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவது குறித்தும் அமித்ஷா உறுதியளித்தார். மணிப்பூரில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறை சம்பவங்களால் 110 க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.