மக்களே உஷார்… இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது..

ந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 7830 ஆக உள்ள நிலையில், இன்று 10,158 பேருக்கு தொற்றுபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று 4,692 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இந்த 5,356 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் 4,47,76,002 லிருந்து 4,47,86,160 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.