நோட் பண்ணுங்க… இனி அரசு பேருந்துகள் இந்த ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும் – முழு விவரம் இதோ.!

மிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச கழிவறை வசதி, சிசிடிவி கேமரா வசதி, எம்ஆர்பி விலைக்கு மேல் உணவை விற்கக் கூடாது, கணினி பில் வழங்குதல் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் உணவகங்கள் விதிமுறைகளை மீறினால் 18005991500 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் எந்தெந்த உணவுகளில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி நெல்லை ஆரியாஸ், ஹோட்டல் அரிஸ்டோ, ஹோட்டல் செந்தூர், ஹோட்டல் சூர்யா, ஹோட்டல் ECR IN, ஹோட்டல் சரவண பவன், ஹோட்டல் சரவண ஜோதி, கதிர்மதி காரைக்குடி, ரமேஷ் ஹோட்டல், ஹோட்டல் அர்ச்சனா, ஹோட்டல் ஆச்சார்யா, ஸ்ரீ ஆனந்த பவன், ஹோட்டல் ஜனனி, பாலாஜி சரவணபவன், திருப்பதி-ஆந்திரா, ரியான்ஷிகா உணவகம், ஜேபி ஹோட்டல், பெங்களூர்- கிருஷ்ணகிரி, வசந்த பவன், கிருஷ்ண பவன், ஹோட்டல் ஆர்யாஸ், KMS ஹக்கீம் ரெஸ்டாரன்ட், ஸ்ரீ ஆனந்த பவன், MSC தீப்ஷிகா, ஹோட்டல் உதயா, ஸ்ரீ பிரசன்ன பவன், பைரவி ஹோட்டல், சரவணபவா, ஹோட்டல் ஆர்த்தி, ஸ்ரீ அன்னபூர்ணா, துர்கா பவன், ஸ்ரீ சரவணபவன், பாலாஜி ஆர்யாஸ், அக்ஷயா ஹோட்டல் மற்றும் அனிதா பவன் போன்ற ஹோட்டல்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்.