கோவையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!!

கோவையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது .கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேசன், ஏ.லியோ பெர்னாண்டஸ், பி. சதீஷ்குமார், ஓய்.அமுல் தாஸ், பனிமயமாதா அன்பியசி.எம்.ஸ்டீபன் பொறுப்பாளர் ஐ.பிரான்சினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக ஆரம்பித்திருக்கும் சி.எம்.எஸ் சோசியல் வெல்ஃபேர் டிரஸ்ட் நல்ல முறையில் செயல்பட்டு வளர்ச்சி அடைந்து இன்னும் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு இந்த ட்ரஸ்டின் மூலம் மக்கள் நற்காரியங்கள் செய்ய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .தேர்தல்கள் வரும் காலங்களில் ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூசிக்கின்ற வகையிலே அங்கிகளை அணிந்து கொண்டு சிறுபான்மை மக்களால் புறக்கணிக்கப்பட்ட பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தன்னிச்சையாகவே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகவே செயல்படுகிறார்கள் .
இவர்கள் அணியும் ஆடையான அங்கியையும்,இவர்கள் பேசும் பேச்சுகளால் ஒட்டுமொத்த சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்களித்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து அனைத்து தரப்பு மக்களையும் பா.ஜ.க பாடாய்படுத்தியதையும், ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து மதத்தை சேர்ந்த இந்திய மக்களை சூழ்ச்சி செய்து பிரித்து மதவெறி ஆட்சி செய்து வந்தது. மட்டுமல்லாமல் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை கொடூரமான முறையில் பாலியல் செய்து நூற்றுக்கணக்கான பேர் அழைத்து சென்ற அந்த கொடும் செயலை கண்டுகொள்ளாத பா.ஜ.கவிற்கும் அந்த மாநிலத்தை எட்டிக் கூட பார்த்து ஆறுதல் சொல்ல செல்லாத பிரதமரையும் மற்றும் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை கசக்கி பிழிந்ததையும், பா.ஜ.க கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை ஆதரித்து
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மாபெரும் தவறை செய்துவிட்டு. இப்போது பா.ஜ.க வுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்று கபட நாடக மாடி, சிறுபான்மை ஓட்டுகளை பெற்று விடலாம் என்று என்னும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். சிறுபான்மை மக்களை பாதுகாப்பது திராவிட முன்னேற்ற கழகமும், அதன் தலைவர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் என்பதை ஒட்டுமொத்த சிறுபான்மை கிறிஸ்துவ மக்களும் உணர்வார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி இந்திய தேசமே திரும்பி வியந்து பார்க்கின்ற அளவிற்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும், எனவும் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் 25 பேர் கொண்ட குழுவோடு மிகுந்த எழுச்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அவர்கள் ஆலோசனையின் படியும் பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்தக் கூட்டத்தில் 20 வது வட்ட தி.மு.க செயலாளரும் நல மையத்தின் கவுரவ ஆலோசகர் ஆர்.புகழேந்தி மற்றும், கௌரவ ஆலோசகர் எஸ்.லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில் கௌரவ ஆலோசகர் அரிமா.பி.அருள் டி’சில்வா நன்றி கூறினார்.