சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 50 லட்சம் மோசடி… ஆள் மாறாட்ட கேடிகளை தட்டி தூக்கிய தாம்பரம் போலீஸ்.!!

தாம்பரம் : தாம்பரம் இரும்புலியூர் முத்துப்பிள்ளையின் மகன் சுரேஷ்குமார் வயது 52 என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் அவர்களை சந்தித்து தனக்கு +44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் டிராய்யிலிருந்து பேசுவதாக கூறி தான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணில் இருந்து பெண்களை கொடுமைபடுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும் இக்குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் இந்த வழக்கில் சுரேஷ்குமாரை ஸ்கைப் என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் மேலும் பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணைக்கு சுரேஷ்குமாரின் குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து பணமாக ரூபாய் 50 லட்சம் அனுப்புமாறு கூறியதை நம்பி அனுப்பியதாகவும் இதுவரை சுரேஷ்குமாருக்கு பணம் திருப்பி வரவில்லை என்றும் தான் ஏமாற்றப்பட்டோம் என்ற தகவலுடன் போலீஸ் கமிஷனரை சந்தித்து கேடிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுரேஷ்குமாரை ஏமாற்றி ரூபாய் 50 லட்சம் பணத்தை மோசடி பேர்வழிகளின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. துப்பு துலக்குவதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் நாங்கள் எதற்கும் சளைக்க மாட்டோம் என்கிற கோணத்தில் விசாரணையை கொண்டு சென்றனர் . மோசடி செய்யப்பட்ட பணமானது கேடிகள் ஆப்பிரிட் மற்றும் வினீஷ் எங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 50 லட்சம் பெறப்பட்டுள்ளது என தெரிய வந்தது . இது சம்பந்தமாக கேடிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு கேரள மாநிலம் சென்று சூப்பர் கேடிகள் ஆப்பிரிட் மற்றும் வினீஷ் முனீர் பசுலு ரஹ்மான் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து குற்றத்தின் போது பயன்படுத்தப்பட்ட நான்கு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது . கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரும் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ போலீஸ் போல் ஆள் மாறாட்டம் மோசடி செய்து பெடெக் ஸ் சிபிஐ போலீஸ் பகுதி நேர வேலை மோசடி பார்ட் டைம் ஜாப் அல்லது டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சைபர் ஹெல்ப்லைன் நம்பர் 1930 அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் wwwcyber crime. gov. In என்ற வெப்சைட் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொதுமக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்..