தினசரி பெண் ஊழியர்களின் ஆடைகளை களைந்து சோதனை செய்யும் நிறுவனம் – ஷாக் நியூஸ்..!

மாஸ்கோ: ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனிடையே அங்கே பெண் ஊழியர்கள் ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல வகை கலாச்சாரங்கள், நிலப்பரப்புகளைக் கொண்ட நாடாகும். அங்கே பல டாப் கோடீஸ்வரர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படி அங்கே இருக்கும் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவர் டாட்டியானா பகல்ச்சுக் (Tatyana Bakalchuk).

இந்த டாட்டியானா பகல்ச்சுக்க்கு சொந்தமான நிறுவனத்தில் தான் பெண் ஊழியர்களை ஒவ்வொரு நாளும் உள்ளாடை வரை ஆடைகளைக் களைய வைத்து சோதனை செய்கிறார்களாம்.

ரஷ்யா: இந்த டாட்டியானா பகல்ச்சுக் ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஆவார். 47 வயதான இவர், ஒரு காலத்தில் ஆங்கில ஆசிரியராக இருந்தார். புதினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வந்த பிறகு இவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த பெண் நடத்தும் நிறுவனத்தில் தான் ஒவ்வொரு நாளும் பெண் ஊழியர்கள் உள்ளாடைகளைத் தவிர அனைத்தையும் களைந்து சோதனை செய்யப்படுகிறார்கள்.

புடினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எடுக்கப்பட்டதாகக் கூறி இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தினசரி காலை மற்றும் மாலை என இரு வேலையும் பெண் ஊழியர்கள் தங்கள் உள்ளாடைகள் வரை அனைத்து ஆடைகளையும் கழற்றி இந்த சோதனையைச் செய்ய வேண்டும். ரஷ்யாவைச் சேர்ந்த இந்த டாட்டியானா பகல்ச்சுக் Wildberries என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ரஷ்யாவில் இருக்கும் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஆடைகளைக் களைந்து சோதனை: உக்ரைன் போர் காரணமாகப் பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இருப்பினும், அதை தாம்டி முறைகேடாக சில இறக்குமதிகளைச் செய்து டாட்டியானா பெரிய லாபத்தை ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தான் இப்படி ஆடைகளைக் களையச் சொல்லித் தேடும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வேர்ஹவுஸில் இருந்து விலையுயர்ந்த மொபைல் அல்லது வாட்ச்சை ஊழியர்கள் திருடிச் செல்வதைத் தவிர்க்கவே இப்படி ஆடைகளைக் களையச் சொல்லித் தேடுகிறார்களாம்.

தினசரி காலை மாலை என இரு வேலையும் அனைத்து ஊழியர்களும் இந்த சோதனை மையத்தைக் கடந்து செல்ல வேண்டுமாம். பெண்கள் மட்டுமின்றி ஆண் ஊழியர்களும் கூட இதுபோல ஆடைகளைக் களைந்து சோதனைக்குச் செல்ல வேண்டுமாம். திருட்டைத் தடுக்கவே இப்படிச் செய்வதாக அந்த நிறுவனம் கூறினாலும் கூட இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பே கிளம்பியுள்ளது. இது ஊழியர்களின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் ஊழியர்களை இது மன ரீதியாகப் பாதிக்கும் என்றே பலரும் சாடி வருகின்றனர்.

ரஷ்யாவின் பணக்காரப் பெண்மணியான டாட்டியானா பகல்ச்சுக் £10.7 பில்லியன் சொத்துக்கு அதிபதியாவர். இருப்பினும், அவர் தனது ஊழியர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வார். இதனால் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நிறுத்த போராட்டத்தையும் கூட எதிர்கொண்டார். உக்ரைன் போர் காரணமாக ரஷ்யப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அதைத் தாண்டியும் இவர் லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.