கோவை ரத்தினபுரி லட்சுமிபுரத்தில் இமயம் காப்பகம் என்ற பெண்கள் காப்பகம் உள்ளது.இங்கு ஏராளமான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இங்கு தங்கியிருந்த மதுரை சாவடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அபிராமி (வயது 19) காரமடை எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்த பிரசாந்த் மனைவி மகாலட்சுமி (வயது 22) தூத்துக்குடி பாண்டவர்மங்கலம் இ.பி. காலணியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுதா என்ற சுப்புலட்சுமி (வயது 37 )திருப்பூர் மாவட்டம் வல்லகுண்டாபுரம் தினேஷ்குமார் மனைவி கவுசல்யா (வயது 26) கவசல்யாவின் 4 வயது குழந்தை ஸ்ரீமதி ஆகியோர் பெண்கள் விடுதி காவலாளி அம்பிகா தலையணைக்கு அடியில் வைத்திருந்த சாவியை தூங்கும்போது தெரியாமல் எடுத்து காப்பகத்தை திறந்து தப்பி ஓடி விட்டனர் .இது குறித்து காவலாளி அம்பிகா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
Leave a Reply