கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெகநாத ராஜன் (வயது 53) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று அவரது வீட்டில் மாடிக்கு தண்ணீர் கேனை எடுத்துச் செல்லும் போது மாடி படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,
Leave a Reply