விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி குழந்தையுடன் திடீர் மாயம் – கணவர் புகார்..!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 39) .பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அவரது மனைவி மகாலட்சுமி ( வயது 26) இவருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதை கணவர் ராமு கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி விஷம் குடித்தார்.மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துக் கொண்டார்.பின்னர் கணவருடன் வசித்து வந்தார் .இந்த நிலையில் தனது 4 வயது குழந்தை ஜோஸ்ரியுடன், மகாலட்சுமி எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ராமு சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு தேடி வருகிறார்கள்.