சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை…

கோவை அருகே உள்ள கே கே புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரது மகன்கள் அழகு (வயது 55) சேகர் (வயது 47) இவர்கள் 2 பேரும் மனைவியை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தனர். இதில் சேகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அயனிங்கடை நடத்தி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர்.தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.இந்த கடந்த 20 20 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்ட போது வேலையில்லாததால் சேகருக்கு மது குடிக்க பணம் கிடைக்கவில்லை. அதனால் அவர் தனது தயாரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது அண்ணன் அழகு, சேகருக்கு குடிபழக்கம் இருப்பதால் வீட்டை அவருடைய பெயருக்கு எழுதி கொடுக்க கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் கடந்த 27-5-2020 அன்றுஅதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார்.அங்கு துக்கம் விசாரிக்க அழகும் தம்பி சேகரும் சென்றிருந்தனர் .பின்னர் 2 பேரும் வீடு திரும்பினார்கள். அப்போது தம்பி சேகர் குடிபோதையில் இருந்து உள்ளார் .அவர்கள் வீட்டுக்கு சென்றதும் சொத்து தொடர்பாக மீண்டும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் .இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சேகர் வீட்டுக்குள் சென்று அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து அண்ணன் அழகுவின் வயிறு ,மார்பு. பகுதியில் குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார் இது பற்றி தகவல் அறிந்தது சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தார்கள். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தம்பி சேகரை கைது செய்தனர்.பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்தது .தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தம்பி சேகருக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.