மூதாட்டியிடம் செயின் பறித்த திருடன் கைது..!

கோவை வெள்ளலூர் அருகே உள்ள மருதூர்,அசோகர் விதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரதுமனைவி கண்ணம்மாள் (வயது 65)இவர் நேற்று அங்குள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேதுபதி என்ற பருத்திவீரன் (வயது 37) என்பவரை கைது செய்தார் .சபரி ( வயது 21) என்பவரை தேடி வருகிறார்கள்.