கும்முடிபூண்டி அருகே மின்சார ரயில் பயணியிடம் செல்போன், பணம் கத்தி முனையில் கொள்ளை அடித்த 2 பேர் கைது.!!

கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் யார் தெரியுமா.. கும்மிடிப்பூண்டியே அதிரும் மிகப்பெரிய ரவுடிகள் கையில் இருக்கும் செல்போனையும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் கொடுத்துவிடு என மிரட்டவே மர்ம ஆசாமிகள் கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்து மௌலிசை தாக்கினர். அவரும் அழுது கொண்டே ரொக்கப்பணம் ஐந்தாயிரத்தையும் மொபைல் போனை எடுத்துக் கொடுத்துள்ளார். ரயில் மெதுவாக செல்லும்போது கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர் . இந்த சம்பவம் குறித்து மௌலிஸ் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இது குறித்து தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில்வே டிஐஜி ராமர் மேற்பார்வையில் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் மற்றும் போலீஸ் படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். இதுகுறித்து ஏடிஜிபி வனிதா தனிப்படை போலீசாரிடம் சற்று நேரத்தில் குற்றவாளிகள் என் முன்பாக ஆஜர்படுத்திட வேண்டும். இல்லையென்றால் என்னிடத்தில் இருக்கும் மிஷின் கன் தான் பேசும் அந்த கன் பேசினால் உடல் எல்லாம் பீஸ் பீசாக சிதறி போய்விடும் . இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கொள்ளை சம்பவமே நடக்கக்கூடாது என்ற கண்டிசனலில் லேவின் (26) தகப்பனார் பெயர் முனியசாமி கும்மிடிப்பூண்டி. 2 விஜி(24) தகப்பனார் பெயர் அமாவாசை திருப்பாலைவனம் ஆகிய இரண்டு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலை மறைவு குற்றவாளிகள் கணேஷ்(27) 2. பிரவீன் (27) 3. வெங்கடேஷ்(25} ஆகியோரை போலீஸ் தனி படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைத்தனர்…