ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு.!!

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்ற பிரிவு போலீசார் பட்டாபிராம் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இந்தப் பேரணியை ஆவடி காவல்துறை ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

அளவுக்கு அதிகமாக அதிகரித்து வரும் இணையதள குற்றங்களின் வாயிலாக பண இழப்பு மிரட்டல் டல் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் என பல்வேறு வகையான குற்றங்கள் பொதுமக்களுக்கு நடந்து வருகிறது. இதை தடுக்க பொதுமக்கள் தங்களது வாட்ஸப்பே ஸ்புக் டெலிக்ராம் ட்விட்டர் பண பரிமாற்ற விண்ணப்பங்கள் சமூக வலைத்தள விளம்பரங்கள் பகுதி நேர வேலை விளம்பரங்கள் போன்றவற்றில் விழிப்புணவுடன் இருந்து இதுபோன்ற குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என போலீஸ் கமிஷனர் கி சங்கர் அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் இணையதள குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் நடேசன் மற்றும் இந்து கல்லூரி முதல்வர் உட்பட 200க்கும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றார்கள். மேலும் ஆவடி பேருந்து நிலையம் அருகில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி சங்கர் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..