பொங்கல் விழாவில் சேவல் சண்டை நடத்திய 13 பேர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள தொட்டிபாளையம் விநாயகர் கோவில் அருகே பொங்கல் விழாவையொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக ஏ. எஸ். குளம். செல்லமுத்து( வயது 29) தொட்டிபாளையம் ஸ்ரீதர் (வயது 21) ஏ.எஸ்.குளம்பிரபு (வயது 29 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது..

இதே போல பொள்ளாச்சி பெரிய கவுண்டனூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக ஊஞ்சவேலம்பட்டி முத்துக்குமார் (வயது29) சுரேஷ்குமார் (வயது 37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .3 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொண்டாமுத்தூர், வஞ்சிமா நகர்,திருமுருகன் நகர் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக தொண்டாமுத்தூர் சேர்ந்த தினேஷ் என்ற தீனா ( வயது 28) சதீஷ்குமார் (வயது25 7தேவராயபுரம் பிரகாஷ் (வயது 31) வஞ்சிமா நகர் இளங்கோவன் (வயது 36) கிணத்துக்கடவு அஜித்குமார் (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்களும், ரூ.1600 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுக்கரை தொப்பம்பாளையம்,|மாரியம்மன் கோவில் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சுந்தராபுரம் ஈஸ்வரன் (வயது 28) வெள்ளலூர் மகேந்திர வர்மன் (வயது 35) மயிலேரி பாளையம் லோகநாதன் (வயது 43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுந்தராபுரம் ரங்கநாதன் மாச்சம்பாளையம் சந்திரன் ஆகியோர்தப்பி ஓடிவிட்டனர்.இவர்களிடம் இருந்து 7 சேவல்களும்,ரூ 1 650 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.