180 மாதங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… 15*15*15 இந்த விதியை பாலோ பண்ணுங்க போதும் ..!

மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரராகி விட வேண்டும், வங்கிக் கணக்கில் 8 இலக்கக் எண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 15*15*15 என்ற விதிப்படி அதை அடையலாம். விடாமுயற்சியும், துல்லியமான கணிப்பும், சிறிது மெனக்கடலும் இருந்தால் போதும்.அது என்ன 15*15*15 விதி!இந்த எண்கள் எதை குறிக்கின்றன என்றால், ஆண்டுக்கு 15% வருமானம் தரும் முதலீட்டுச் சாதனங்களில், மாதம் ரூ.15 ஆயிரத்தை, 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், முதலீடு செய்த தொகை ரூ.27 லட்சமாகவும், ரிட்டர்ன் ஆனது சுமார் ஒரு கோடியை எட்டியிருக்கும். கூட்டு வளர்ச்சி மூலம் இந்த அபார லாபத்தை பெற முடியும். இங்கு நாம் முதலீடு செய்யும் பணம் மட்டுமே இந்த லாபத்தை தராது.

நாம் அந்தப் பணத்தை விட்டு வைக்கும் காலமும் இங்கு முக்கிய பணியைச் செய்கிறது. இதற்கு பெயர் தான் கூட்டு வட்டி.கூட்டு வளர்ச்சி என்றால்? முதலீட்டு திட்டங்களில் இந்த வகை வளர்ச்சி அளவிடப்படுகிறது. நாம் வழக்கமாக முதலீடு செய்யும் தொகையை, காலப்போக்கில் கணிசமான தொகையாக்கும் நிகழ்வு இது.

முதலில் நாம் முதலீடு செய்யும் பணம் வளர்ச்சி அடையும், வளர்ச்சி அடைந்த தொகையும் மூலதனத்துடன் சேர்ந்து வளரும். இவ்வாறு இந்தப் படிநிலை அடுத்தடுத்து முன்னேறி முதலீட்டுக் காலம் வரை தொடரும். 15% வளர்ச்சியை எதில் எதிர்பார்க்கலாம்இன்றைக்கு 15% வளர்ச்சி என்பது பங்குச்சந்தை மற்றும் பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் மட்டுமே சாத்தியம். 10 ஆண்டுகால ஆர்.டி.,க்கு வங்கிகள் அதிகபட்சம் 6% ரிட்டர்ன் வழங்குகின்றன.

அதன்படி பார்த்தால் 180 மாதங்கள் முதலீடு செய்த ரூ.27 லட்சம், ரூ.43.7 லட்சமாக மட்டுமே வளர்ந்திருக்கும். 10ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மியூச்சுவல் பண்ட்கள் திட்டங்கள் பலவும் 10 முதல் 20% ரிட்டர்ன் வரை வழங்கியுள்ளன. ஆனால் முந்தைய ரிட்டர்னையே அவை எதிர்காலத்திலும் கொடுக்குமா என்பது உறுதி கிடையாது. ஏற்ற இறக்கமான சந்தைகளில் குறிப்பிட்ட மியூட்சுவல் பண்ட்கள் நெகடிவில் திரும்பாமல் இருந்ததா, பண்ட் மேனேஜர் நம்பகமானவரா உள்ளிட்ட அடிப்படைகள் மற்றும் டெக்னிக்கலை வைத்து வைத்து பண்ட்களை முடிவு செய்யலாம். 10 ஆண்டுகளில் சிறந்த ரிட்டர்ன் வழங்கிய பண்ட்களின் பட்டியல் https://www.amfiindia.com/research-information/other-data/mf-scheme-performance-details என்ற தளத்தில் கிடைக்கின்றது.