லண்ட சென்ற பார்சலில் அணுகுண்டு மூலப்பொருளா? எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. பாகிஸ்தான் மறுப்பு ..!

ண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் யுரேனியம் இருந்தது. இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்தது, இந்த செய்தி “உண்மையானதல்ல” என்று கூறியது.

இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா மறுத்துள்ளார்.

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட யுரேனியம் பூசிய சரக்கு பெட்டகம் கராச்சியிலிருந்து அனுப்பியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

இங்கிலாந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்துக்கும், தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மும்தாஜ் கூறியுள்ளார்.

யுரேனியம் என்பது பாறைகளில் காணப்படும் ஒரு கதிரியக்க உலோகமாகும், இது பொதுவாக அணு மின் நிலையங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு சக்தி அளிக்கும் உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படலாம்.