போலீசாக நடித்துகோவை தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ. 5லட்சம் கொள்ளை.,வாலிபர் கைது. 7 பேருக்கு வலை….

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் யார் ?எங்களை ஏன் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் முதல் அமைச்சரின் சிறப்பு பிரிவு போலீசார் என்றும்ஒரு வழக்கு தொடர்பாக உங்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் குணசேகரனையும், நாராயணனையும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு கடத்திச் சென்றனர். அவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர் அந்த கும்பல் உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டினர். ஆனால் குணசேகரன் தற்போது அவ்வளவு பணம் இல்லை. ரூ 5 லட்சத்தை நண்பர் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என்று கூறினார் இதையடுத்து அவரது நண்பருக்கு போன் செய்து அவர்கள் கூறிய இடத்திற்கு ரூ 5 லட்சத்தை கொண்டுவரும்படி கூறினார் ..இதை யடுத்து அந்த கும்பல் ரூ 5 லட்சத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது .அங்கிருந்து கோவை வந்த குணசேகரன் நடந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அப்போது அந்த கும்பலில் தன்னிடம் வேலை பார்த்த கார்த்திக் என்பவர் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இந்த நிலையில் கடத்தலில் தொடர்புடைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,கூட்டு புளி தோட்டத்தைச் சேர்ந்த மணிவேல் (வயது 34) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கும்பலை தேடி வருகிறார்கள் ரூ 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.