பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை கோர்ட்டில் போலீசார் மனு.!!

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ந் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் .அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது :-மகளிர் போலீசார் குறித்து பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்த சவுக்கு சங்கர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதற்கு இடையே சவுக்கு சங்கரின் வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கைதான சவுக்கு சங்கரை கோவை சிறையில் அடைக்கும் போது வாய் பகுதியில் லேசான காயம் இருந்தது .ஆனால் தற்போது அவரை சிறையில் அடைத்த பின்னர் காவலர்கள் அவரை பலமாக தாக்கியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு உள்ளது. வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் சிறைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவர் அவர் கூறினார்..