புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் நடைபெறுகிறது…

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழா தொடங்கி நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டில் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமாகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழர் பண்டிகையாம் தைப்பொங்கல் ஜனவரி 15ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உழவர்கள் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். புதுப்பானையில் புத்தரிசி இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வேளாண் மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் என்றாலே தமிழர்களின் மரபாக நினைவுக்கு வருவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டி தான். தை மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றது.