மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார்…

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் சைக்கிள்களை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்காவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கிரிஜா தலைமை தாங்கினார் ஒன்றி கவுன்சிலர் இரா வினோத்குமார் ஊராட்சி துணைத் தலைவர் ஏ எம் யுவராஜ் முன்னிலை வகித்தார் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகப்புத்ரா அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த முகாமை மதுரவாயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கே கணபதி துவக்கி வைத்தார் அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் மனு கொடுத்தார் அம்மனுவை மாற்றுத்திறனாளி அதிகாரியிடம் கொடுத்து நடவடிக்கை எடுத்து மூன்று சக்கர சைக்கிள் வழங்க உத்தரவிட்டார் அதன் பேரில் மனு பரிசீலனை செய்யப்பட்டது உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் மேடைக்கு எடுத்துவரப்பட்டது அதை மாற்றுத்திறனாளிக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மாற்றுத்திறனாளி முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ஆனந்த பெருக்கோடு நன்றியை தெரிவித்தார் இதே போல் ஜாதி இருப்பிட சான்றிதழ் வருமானச் சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு வருவாய் துறை சார்பில் ஆன்லைன் சான்றுகள் வழங்கப்பட்டன முகாமில் பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவற்றில் உடனடி தீர்வும் சில மனுக்கள் பரிசீலனுக்கு எடுத்துக் கொண்டனர்