கோவை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் .புது காலனி சேர்ந்தவர் கருப்பன் (வயது 72) இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவர் தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply