ஆடு வளர்க்கிறோம் வாங்க… முதலீடு செய்யுங்க… என கூறி ஏமாற்றி ரூ.1 கோடியே 34 லட்சம் மோசடி- கேடி தம்பதி கைது.!!

தாம்பரம் அடுத்த நாவலூர் பகுதியில் அக்ரோ டெக் இன்டி கிரேட்டடு பார்மர் ப்ரொடியூசர் கம்பெனி என்ற பெயரில் கொழு கொழு ஆட்டுப்பண்ணையை மாணிக்கம் வயது ( 44) என்பவனும் அவனது ஆசை மனைவி செல்வ பிரியா வயது(38) என்ற கேடியும் சேர்ந்து கொண்டு நாங்கள் ஏற்றுமதி தரம் உள்ள கொழு கொழு கொழு ஆடுகளை வளர்த்து வருகிறோம். நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதல்  பத்து லட்சம் வரை முதலீடு செய்தால் 4 முதல் 10 சதவிகிதம் வரை மாதம் தோறும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய சதாம் உசேன் (28) தகப்பனார் பெயர் சக்திவேல் மற்றும் 27 பேர் கொழு கொழு ஆட்டின் மீது பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ரூபாய் 1 கோடியே 34 லட்சத்து 11 ஆயிரத்து 460 ரூபாயை முதலீடு செய்தனர். போட்ட முதலீடும் கிடைக்கவில்லை . அசலும் கிடைக்கவில்லை . நம்மளை நல்லா ஏமாத்திபுட்டான் அந்த ரெண்டு கேடிகள் மீ து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சார் கிட்ட கம்பளைண்ட் கொடுப்போம். அவர் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என புகார் கொடுத்தனர் . அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் குமார் கிருஷ்ண குமார் மற்றும் போலீசார் பன்னீர்செல்வம் ஜானி கிரி மற்றும் வர்ஷா ஆகியோர் குற்றவாளிகளை தேடிய போது அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்தது .     தலை மறைவான கேடிகள் மாணிக்கம் அவனது மனைவி கேடி செல்வ பிரியா தப்பி ஓடாமல் கிடுக்கி பிடி போட்டு நைலான் கயிறு மூலம் தப்பி ஓடாமல் இருக்க கைது செய்தனர் . கேடிகளிடமிருந்து அனைத்து போலி ஆவணங்களை கைப்பற்றினர் .குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர் . பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் போது எந்தவித ஆசைக்கும் உட்படாமல் நேர்மையாக செயல்பட்ட தனி போலீஸ் படையினரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்..